வீரத்தை விதை

வீரத்தை விதை;
நெஞ்சிலே வீரத்தை விதை;
வஞ்சகர்களை வீரட்டியடிக்க
நெஞ்சிலே வீரத்தை விதை;
வீற்றிருந்தால் வராது வீரம்;
விலைபோகாதது வீரம்;
விருந்து படைத்தால் வராது வீரம்;
வெட்டிச்செயலில் இல்லை வீரம்;
வெறிச்செயலில் இல்லை வீரம்;
வெற்றிச்செயலே வீரம்;
சுற்றித்திரிந்தால் வராது வீரம்;
சுற்றும் வால் இல்லாமலும் வரும் வீரம்;
சொட்டும் கண்ணீரில் இல்லை வீரம்;
செய்யும் தொழிலில் வேண்டும் தீரம்;
விளையாட்டிலும் வேண்டும் வீரம்;
வேர்த்து விரு விருத்தால் மட்டும் வராது வீரம்;
வேடிக்கை பார்ப்பதில் இல்லை வீரம்;
அடைக்கலம் என்று வந்தவனை;
அடித்து விரட்டுவதில் இல்லை வீரம்;
அண்டை வீட்டுக்காரனிடம் போடும்
சண்டையில் இல்லை வீரம்;
அடுத்தவரை வீழத்தி வாழ்வதில் இல்லை வீரம்;
அடித்து பிழைப்பதில் இல்லை வீரம்;
அடுத்தவன் சொத்தை அபகரிப்பதில் இல்லை வீரம்
இடித்து பேசுவதில் இல்லை வீரம்
அட்சியை பற்றி
அடக்கு முறையை கையால்வதில் இல்லை வீரம்

அசிங்கப்படும் செயல்களைச் செய்வதில்லை வீரம்;
அப்பன் ஆத்தாவை
அநாதை இல்லத்திற்கு அனுப்பிவைப்பதில் இல்லை வீரம்;
பேரம் பேசுவதில் இல்லை வீரம்;
ஈரம் இல்லாது ஈனச் செயலால் வெல்வதில்லை வீரம்;
இரக்கம் இல்லா வெற்றியில் உறங்க வில்லை வீரம்;
இரத்தம் தோய்ந்த வாலில் வீற்றிருக்க வில்லை வீரம்;

வேலையும் வாலையும் தூக்கி
வெற்றிபெறுவதை விட;
வெண்சினத்தைபோக்கி
மனித நேயத்துடன்
பகைவனையும் நண்பனாக்குவதில் இருக்கு வீரம்;
பகையில்லா உறவில் பிறக்கும் வீரம்;
புரட்சி செய்ய பிறக்கவேண்டும் வீரம்;
புதிய உலகை சமைக்க உன் உள்ளத்தில் வேண்டும்
உரம் என்னும் வீரம்;
திடமான செயலில் உண்டு வீரம்;
திருந்தி வாழும் வாழ்வில் உண்டு வீரம்;
எனவே
வீரத்தை விதை

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (14-Aug-21, 9:59 pm)
Tanglish : veerathai vaithai
பார்வை : 3497

மேலே