சீனனைப் பார்

சீனனைப் பார்

சீனனைப் பார்த்தாயோ !
சிறியவன் உருவத்தில்,
சிந்தனையால் உழைப்பால்,
சிதறியிருந்த நாடுதனை,
சீராக்கி சிறப்பாக்கி விட்டான் அவன்.

அங்கே !
மதமில்லை ஜாதி இல்லை,
மறு கேள்விக்கோ இடமில்லை,
திட்டம் ஒன்று தீட்டி விடின்,
திடமாக முடித்து வைப்பார்.

இங்கே !
மதமுண்டு ஜாதி உண்டு,
மதத்திற்குள் பல வீடுண்டு,
ஜாதிக்குள் பல கோடுண்டு,
ஜனநாயகம் என்று சொல்லி,
கேள்விக்கு மேல் கேள்வி,
திட்டம் ஒன்று தீட்டிவிடின்,
திடமாகவே கொள்ளையடிப்பார்,
மக்களோ நடுத்தெருவில்,
மாற்று வழி தெரியாமல்,
மாயோனை தேடுகின்றார்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (15-Aug-21, 8:23 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 63

மேலே