அழிவுகாலம் இது
உன் வீழாவிற்கு
பட்டாசு வெடித்தாய்
காற்று மண்டலம் மாசு பட...
பறவைகள் பயந்தோட..
கூட்டம் கூடினாய்
தெருக்களைக் குப்பயாக்கினாய்
திருவிழா என
உணவை வீணடித்தாய்..
பூ பழம் பால் என
அனைத்தையூம் ஒரே நாளில் வீசி மகிழந்தாய்..
கல்யாணம் என்றாலும்
காதுகுத்து என்றாலும்
ஆடம்பரச் செலவாக்கினாய்...
இறந்துவிட்டால்
இடுகாடு செல்லும் வரை
சாலையை நிறுத்தி
ஆரவாரம் செய்தாய்
இன்று
யார் இறந்தாலும்
அனாதைப் பிணமாய்
அருகில் உறவின்றி எரியும் உன் உடல்
ஊர் சுற்றினாய்...
பெற்றோரை மறந்து
பெல்ஜியம் சென்றாய்
உறவினரை மறந்து
UK சென்றாய்..
பணம் என ஆடினாய்
உழைக்க மறந்தாய்...
உலாசமே வாழ்க்கை
என
ஏழைகளை அடிமையாக்கினாய்...
எல்லி நகைத்தாய்
அனைத்தும் உண்டெனக்கு எனும்
ஆணவச் செருக்கு
ஒரு நொடியில் அடங்கியது..
இன்று
அண்டை பட்டணமே
செல்ல வருடமாகலாம்...
மரணம் என்பது என்றும் நிகழலாம்...
மனைவியோ மகனோ இறந்தாலும்
பெரும் பணம் கொண்டாலும்
இறந்த உறவை காணாது
நாடு தாண்ட முடியாமல் துடித்தாய்..
அளவாய் இரு.
அன்பாய் இரு.
வேர்வை சிந்தியவன்
என்றும் நோய்க்கு
அஞ்சான்...
உனக்கு நரகமாகும் இக்காலம்
வேறு எந்த உயிருக்கும் அதே உலகம் தான்.
தவறு செய்த மனிதன் மட்டும் தண்டிக்கப் படுகிறான்.
மீண்ட பின்
தவறை உணராது போனால்..
மீண்டும் மீண்டும் வரும்
பேரழிவு....
#siven19