அவள்

ஆடல் அரங்கில் ஆடிப்பாடி பலர்
மனத்தைக் குளிர்விக்கும் அவள் பாவம்
தனது வீட்டிலோ வீட்டார் ஆட்டிப்படைக்க
சிறகொடிந்த கிளிபோலவே வாழ்கின்றாள்
அபலையின் மௌன அழுகையின் ராகத்தை
யாரடா கேட்பாரோ எப்போது அப்போது
இவள் துயர் நீங்க

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (14-Aug-21, 1:46 pm)
Tanglish : aval
பார்வை : 68

மேலே