ஜீவகாருண்யம்

பூவும் காயும் கனியும் மற்றும்
தலைகள் பலவும் தந்தான் இறைவன்
மானிடருக்கு உண்டு மகிழ வெகுவே
மனிதனோ உயிர் பலி செய்து
ஊமை உயிரினங்களின் இறைச்சிதான்
உண்பேன் என்கின்றான் என்று தணியும்
இவர்களின் இறைச்சி மோகம் இதுவும்
ஒரு காமமே என்று 'ஜீவா காருண்யம்'
சிந்தனை வளர்ந்து செயல் பாட்டில்
அப்படி ஓர் நாள் வந்தால் பூமியில்
வன்மம் என்ற சொல்லே இல்லாமல் போகும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Aug-21, 1:38 pm)
பார்வை : 54

மேலே