தேசம் எமது தேசம்

தேசம் எமது தேசம்;
தேசம் எமது வாசம்;
தேசம் எமது சுவாசம்;
தேசம் எமது விசுவாசம்;
தேசம் எமது பாசம்;
தேசம் எமது கோசம்;
தேசம் இது எமது தேசம்;
139 கோடி மக்கள் கூடிவாழும் இந்திய தேசம்.

தேடித் தேடி கிடைக்காத பொன்னானதேசம்;
தேசம் இது எங்கள் இந்திய தேசம்;
இங்கு
அந்நிய சக்திகளுக்கு எங்க வாசம்.

பாரதத்தாயின் ஒரு தாய் பிள்ளைகள்;
ஒன்றாய் வாழும் குழந்தைகள் நாங்கள்;
ஒற்றுமையே எங்கள் உயிர் மூச்சி;
ஒருமைப்பாடே எங்கள் பேச்சி;
நாங்கள் பிறப்பால் வளர்ப்பால் இந்தியர்கள்;
பிரிவினை என்ற ஒன்றே இல்லை எம்முள்;
சாதி மதங்கள் மொழிகள் பலவாயினும்;
சமமாய் வாழும் பழமை சாதி .

சாதி அது; இந்தியசாதி ;
பாரதமே எங்கள் சந்நிதி.

எங்கும் இந்தியமே பேசுவோம்;
தேசமே எங்களது நேசம்:
நெருங்கியே பழகிடுவோம் அன்பால்;

நெஞ்சே வெடித்துச் சிதறினும்
பிரியமாட்டோம்
பிரிவினை சக்திகளுக்கு தரமாட்டோம் இடமும்;
நேசத்துடன் எங்கள் தேசத்தில் வாழ்வோம்.

இதயத்துடிப்பில் ஓடுது சுதந்திர வேகம்;
எங்களுக்கு எடுப்பதோ சுதந்திர தாகம்;
வீசும் காற்றில் மணக்கும் எங்கள் சுதந்திர வாசம்;
பாய்ந்து வரும் அலைகள் பாடும்
பாரதத்தின் பெருமைதனை.

சேற்றில் முளைக்கவில்லை எங்கள் சுதந்திரம்;
செங்குருதியில் முளைத்த சுதந்திரம்;
ஆயிரம் ஆயிரம் வீரர்கள், தியாகிகளின் உயிரை பணயம் வைத்து வாங்கிய சுதந்திரம்;
அறப்போரிலும் அகிம்சையிலும் கிடைத்த சுதந்திரம்;
வீரங்கள் தந்த சுதந்திரம்;
வீரர்கள் தாங்கும் சுதந்திரம்;

சோரம் போகாத சுதந்திரம்;
சுவர்க்கம் தந்த சுதந்திரம்;
சொந்தமாய் வாழ வாய்த்த சுதந்திரம்;
கையை வீசி நடக்க வாய்த்த சுதந்திரம்;
வீசிஎறிய வேண்டும் நம்முள் பகையை.

நான் என்ற அகந்தையை நீக்கி;
நண்பர்களாய் இணைவோம்;
நாசம் செய்ய எவர்வரினும் நசுக்கியே மிதித்திடுவோம்.

தேசம் எமது தேசம்;
இமயமுதல் குமரிவரை எங்கள் தேசம்;
பங்கம் சேதம் செய்யாது பாதுகாத்து இருப்பதே நமது கடமை;
பரஸ்பர உறவே நமது மந்திரம்.

யாருக்கும் அஞ்சோம்;
நெஞ்சை நிமிரித்தியே சொல்லுவோம்;
இந்தியா எமது தேசம் மென்று.

சுதந்திரம் எங்கள் மூச்சி;
சுத்தி வரும்காற்று பேசும் எங்கள் சுதந்திரத்தை;
வெட்டிக்கதை பேசமாட்டோம்;
வெட்டிப்போட்டாலும்,
வெறுக்க மாட்டோம் எங்கள் தேசத்தை.

சுட்டேபோட்டாலும் சுமந்தே காப்போம்.
இந்தியதேசத்தின் ஒருபிடி மண்ணை விட்டுத்தரமாட்டோம்.

சேர்ந்து இருப்போம்;
சோர்ந்து இருக்க மாட்டோம்;
சோரம் போகமாட்டோம்;
சோற்றுக்காக அடித்துக்கொள்ள மாட்டோம்.

வீரம் விளைந்த பூமியிது;
வீரியம் நிறைந்த பூமி இது;
விவேகம் நிறைந்த பூமி இது;
தாய்மையை போற்றுவோம்;
தாய்நாட்டைக் காப்போம்.

கற்போம் பழபொழிகளை ;
கற்பிப்போம் ஒற்றுமையை;
நாடு காக்கப்புறப்படுவோம், நாம் நாம் நாம் இந்தியன் என்று;
நமது நமது தேசம் என்றே பறைசாற்றுவோம்.

தேசம் காக்கும் எங்கள் சகோதர சகோதரிகளை; தெய்வமாய் தினமும் வணங்கிடுவோம்.

எழுத்தால் இணைவோம்;
எழுச்சியால் இணைவோம்;
உணர்ச்சியால் இணைவோம்;
ஒருமைப்பாட்டோடு இணைவோம்.

ஒன்றாய் முழங்குவோம்,
வந்தே மாதரம் என்று.

வெந்தே போனாலும்,
கூறுவோம் தேசமே எங்கள் வாசம் என்று;
நேசமே எங்கள் விசுவாசம் என்று;
வந்தேமாதிரம் வந்தேமாதிரம்,
என்று முழங்குவதே எங்கள் சூத்திரம்.

நம் சுதந்திர தாய்க்கு வைரவிழா எடுத்தே
பெருமையுடன் கொண்டாடிடுவோம்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (15-Aug-21, 2:34 pm)
பார்வை : 4980

மேலே