அகதி
அகதி
கோபாலன் என்று எனது பெயர்,
கோவிந்தனுக்கும் கோபாலன் என்று பெயர்,
அவனுக்கோ என்றும் தீராத விளையாட்டு,
எனக்கோ என்றும் தீராத பசி.
அம்மா இருந்த போது பசி இல்லை,
அப்பா இருந்த போது கவலை இல்லை,
காக்கியோடு* வந்தது இவை இரண்டும்,
கோபாலன் வருவானோ இவை தீர்க்க.
* காக்கி = army
ஆக்கம்
சண்டியூர் பாலன்.