அதிர்ஷ்டக்காரர் சிலரே என்பதை உணரவில்லை
மனம் ஒரு குரங்கு என்பது குரங்குக்கு கூட தெரியும்
நாமும் குரங்குகள் என்பதுதான் நமக்கு தெரியாது
நாம் நல்லவர்கள் என்பதை நம் மனதும் அறியும்
மனது கெட்டது என்பதை நாம் அறியமாட்டோம்
வாழ்வு மிகவும் இன்பம் என்று கனவு காண்போம்
கனவுகள் தொடர்வதில்லை என்பதை அறியோம்
ஆசைகள் நமக்கு மிக மிக அதிகம், நன்கு தெரியும்
ஆசையே நிராசை என்பதை நாம் உணரமாட்டோம்
நாம் அறிவாளிகள் என நினைத்து மயங்குகிறோம்
அதிர்ஷ்டக்காரர் சிலரே என்பதை உணரவில்லை
நாளை எல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறோம்
நாளை உயிருடன் எழுவோமா, எவனுக்கு தெரியும்?