ஒற்றுமையாய் சிந்திக்காமல் மொத்தம் அடிமை ஆகினோம்
(கீழ் வரும் கவிதையை நான் பாடி YouTube யில் வெளியிட்டுள்ளேன் .YouTube இல் 'Joyram special song ' என்று type செய்தால் நீங்கள் இந்த பாடலை " Ram Thyagarjan " என்ற என்னுடைய channel இல் பார்த்து கேட்டு ரசிக்க முடியும்.??? நன்றி)
கவிதை
ஒற்றுமையாய் சிந்திக்காமல் மொத்தம் அடிமை ஆகினோம்
வேர்வையுடன் ரத்தமும் சிந்தி சுதந்திர த்தை வாங்கினோம்
சுதந்திரம் தான் நாமும் வாங்கி தலைமுறை ஒன்று போனது
உண்மையிலே பார்த்தா, இருந்த சுதந்திரமும் போனது...(ஒற்றுமையாய் சிந்திக்காமல்)
ஒரு மொழியை நாட்டின் மொழியாய் கொள்ளாமல் போனது
ஒருவரை ஒருவர் அறிய வாய்ப்பின்றி போனது
மாநிலங்களின் எண்ணிக்கை அதிகமாகி போனது
உள்ளூர் ஆள் வெளியூராளென பாரபட்சம் வந்தது...(ஒற்றுமையாய் சிந்திக்காமல்)
வட இந்தியா தென் இந்தியா என்ற எண்ணம் வளர்ந்தது
மொழியின் செல்வாக்கு கொண்டு அரசாங்கம் அமைந்தது
இனம்சார்ந்த கட்சிகள் அரசியல் ஆதாயம் கண்டது
மாநில சுயாட்சி என்பது அதனால் உருவானது.....(ஒற்றுமையாய் சிந்திக்காமல்)
கடமையை செய்யக் கூட லஞ்சம் கொஞ்சம் கொடுக்கணும்
இழிவான இச்செயலை மக்கள் தான் முடக்கணும்
திறமையும் பொறுப்பும் தான் ஆதாரமா இருக்கணும்
பொருளாதாரம் மட்டுமே வறுமையை நிர்ணயிக்கணும்...(ஒற்றுமையாய் சிந்திக்காமல்)
மாநில மக்கள் எல்லாம் தேச மன்னர்கள் ஆகணும்
யாதும் ஊர் யாவரும் கேளிர், உண்மையில் நிறைவேறணும்
என் மாநிலம் என்பது போய் நம் நாடு என்று ஆகணும்
பாரதத்தாய் என் தாய் என்று ஒவ்வொரு வரும் முழங்கணும்... (ஒற்றுமையாய் சிந்திக்காமல்)
பெண்களையே கண்களாய் நினைத்தால் நிலை மாறுமே
அவமானம் பெண் குலத்தை தீண்டாமல் இருக்குமே
சிறுவர்களை சிறுவர்களாய் வாழ வைத்தால் போதுமே
வரும் காலம் நம் நாட்டுக்கு அற்புதமாய் இனிக்குமே
ஒவ்வொரு இந்தியனுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்