தமிழ் புகழ்
வீறுகொண்ட செந்தமிழ் நீ..!
வீரநடைப்போடும் உன்புகழ்
உலகெலாம்...!
என் நாவிலெ முதலில் தோன்றிய
ஏன் உலகிலெ முதலில் தோன்றிய
மூத்த முதல்மொழி எங்கள் தாய்மொழி தீந்தமிழ் தானே...
மாற்றம் கொள்ளாத
பல்லாயிர மொழிகள்
உண்டு இவ்வுலகில் தானே..
ஆனாலும் ஆண்டு ஆயிரம் ஆயினும்
புதுமாற்றம் கொண்டு நிலைத்தோங்கும் எங்கள் ஒரே உயிர்மொழி ஒன்று தானே...
இயல் இயற்றிடலாமே
இசை இசைத்திடலாமே
நாடகம் நடத்திடலாமே
பூமொழி போலுள்ள நம்தாய்
தமிழ் ஒன்றாலே..
இருநூற்று நாற்பத்தேழும் கலக்கும்
எம் குருதியெல்லாமெ...
எம் நாவெல்லாம் தவழும் தாய்குழந்தை நீயே யாகுமே...
தென்நாட்டிலெ உருவெடுத்து
முச்சங்கம்கொண்டு உனைவளர்த்து
உன்பெருமை எடுத்துரைத்து
உலகளாவிய அறியச்செய்து
உன்மொழி செம்மொழியென
முன்மொழிய வைத்து உன்புகழ் இமயம் ஏற்றிடுவோமே...
நீர்மேல் எழுத்துப் போலல்லாமல்
கல்மேல் உன்னுருவம் பொரித்து
வரும்தலைமுறை உன்பெருமை வாசிக்கச் செய்திடுவோமே...
நாளும் இன்னிசை கொண்டு
முதல்தமிழ் பரப்பு ...
யாவருடனும் ஒற்றுமைக் கொண்டு
தாய் தமிழிலே பேசு ...
வாழ்வை இனிமையாக்கியது
உன் தாய்மைப் பண்பு...
என்னை கவிஞனாக்கியது
உன் புதுமைப் பண்பு..
வீழாதே வீழாதே ஒருநாளும்
வீழ்த்திடும் கூட்டம் வந்தாலுமே...
காத்திடுவானே கடைசி தமிழன்
ஒருவன் இருந்தாலுமே..