ஆயிரம் உண்டு இங்கு சாதி

குறள் வெண்பா

நாடுயிந்து நாடெனமாற் றாவிட்டார் இன்று
நரிகள்பா யத்தான் வரும்


நேரிசை வெண்பா

ஆயிரம் உண்டு இங்கு சாதி
அந்நியர் வந்து புகலென்ன நீதி (பாரதி)




அரசியல் அமைப்பு சொல்லும் சொல்கேள்
ஆயிரம் உண்டு இங்கு சாதி
அரசியல் அமைப்பு! சொல்லவே இல்லை
சாதியை அழிக்கச் சொல்லி பாரும்
சாதி மதத்தில் பிரச்சினை வந்தால்
சட்டம் சாதி மதசார் பில்லா
நடவடிக் கைகைக் கொள்ளல் வேண்டுமாம்
மக்களுக் குச்சா திமதம் கூடா
தென்றா சட்டம் சொன்னது படியும்
சட்டம் படிக்கா அரசியல் வாதி
முட்டாள் வந்து புகலென்ன
நீதி சட்டம் திருப்பிப் பாருமே

எழுதியவர் : பழனி ராஜன் (19-Aug-21, 8:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 259

மேலே