ஆற்றாமை - ஸ்செஸ்வான் ஃப்ரைட் ரைஸ் - வெள்ளை சட்டை
ஆற்றாமை - இது ஒரு இயலாமை நிலை.
இது எப்படியெல்லாம் வெளிப்படும்jQuery17106726896656668071_1629401906029
அழுகையாக!!
கூச்சலாக!!
கோபமாக!!
வன்முறையாக!!
இது பாலினம்,வயது, உள்ளத்தின்மை பொருட்டு வேறுபடும் , வெளிப்படும்!!
ஆனால் நாம் என்றும் இன்றும் கோபத்தை மட்டுமே ஆற்றாமையின் உணர்ச்சி வெளிப்பாடாக கொண்டிருகின்றோம்.
2011 நானும் அப்படித்தான் !!
அத்தகைய ஆற்றாமையின் வெளிப்பாடாக கோபத்தை எப்பொழுது வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.
காரணம் இதுவென பிறிதறியும் வயதிலும், சூழலிலும் நான் அப்போது இல்லை.
புதிய ஊர், புதிய மக்கள், புதிய கலாச்சாரம், சற்றும் பழகம்மில்லாத வாழ்வியல் சூழ்நிலை, அத்தகைய கோபத்தை அவ்வப்போது அனுதினமும் எனக்கு அறிமுகப்படுத்தியது.
அப்படி செய்வதறியாது தவித்த ஒரு மாலை நேரத்தில் கோபத்துடன் பசியும் சேர்ந்து பற்றிக்கொண்டது.
பசியுடன் போராட உடல் ஒத்துழையாததால் நான் சாப்பிட முடிவெடுத்து ஒரு உணவு விடுதியை அடைந்தேன்.
அது ஒரு "சீன துரித உணவு மையம்"
என்ன??
அட "சைனீஸ் பாஸ்ட் புட்" ங்க!!
அன்று தான் எனக்கு அங்கு அறிமுகம் ஆனது "ஸ்செஸ்வான் ஃப்ரைட் ரைஸ்"
அதில் என்ன விசேஷம்??
"காரம்"தாங்க விசேஷம்!!
உண்மையில் சீனாவில் ஸ்செஸ்வான் மிளகு எனும் சிவந்த மிளகை காரத்தின் ருசிகானதாக ,தங்கள் பாரம்பரிய உணவு பட்டியலில் பிரதனமானதாக கொண்டிருந்தனர் சீனர்கள்.
ஆனால் இது நமக்கு அறியப்பட்டாலும் , பழக்கப்படாத,கிடைக்கப்படாத ஒன்று என்றபடியால் நம் மக்கள் அதற்கு மாற்றாக சிகப்பு மிளகாயையும் அதன் அறைத்த விழுதையும் முன் வைத்தனர்!!
இப்படி ஒன்றை ஃப்ரைட் ரைஸ்ல் சேர்த்தால்?? எப்படி இருக்கும்??
காண், மூக்கு,வாயெல்லாம் தண்ணிதான்!!!
சர்வர் வந்து நின்றார்..
பட்டியல் அட்டையில் புதிதாக எதோ ஒன்று தென்பட அது என்ன ?? என்றேன்.
"ஸ்செஸ்வான் ஃப்ரைட் ரைஸ்
கொஞ்சம் காரமா இருக்கும்" என்றார்
"சரி அது ஒன்னு கொண்டாங்க" என்றேன்
"சைட் டிஷ் எதாவது" - சர்வர்
"ஒரு பெப்பர் சிக்கன்" - என்றேன்
மனுசனாட நீயெல்லாம்??
சொன்னதே ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸ்,அதுல பெப்பர் சிக்கன் வேறயா?? என்கிறீர்களா??
உணவு மேசையை அடைய உண்ண தொடங்கினேன்.
பசியின் காரணமாக ருசியறியாமல் உள்ளே சென்று கொண்டிருந்தது அந்த ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸும் பெப்பர் சிக்கனனும்!!
கண் வழி கண்ணீர் ,மூக்கு வழி தண்ணீர்,வாய் வழி எரிச்சல் ,எனினும் முழுவதுமாக உணவை முடித்துவிட்டு வெளியே வந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு நின்றிருந்தேன்.
ஆமாம் என்னகுள் இருந்த அந்த கோபம் என ஆச்சு?? எங்கே போச்சு??
அது ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸ் காரத்தோட கரஞ்சி காணாம போச்சு!!!
அட இது நல்ல இருக்கே என தோன்ற , உதையமானது அந்த விபரீத எண்ணம்!!
எங்கு எப்போது ஆற்றாமை எனும் கோபம் வெளிபட்டாலும் நான் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி
"ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸ், பெப்பர் சிக்கன்"
ஆமாம் ஏன்னா நமக்கு தான் கோபம் வந்தால் பசியும் சேர்ந்து ஒட்டிகுதே!!!
சரி ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸ்க்கு விளக்கம் சொல்லிட்டீங்க ... அது என்ன வெள்ளை சட்டை??
அட இருங்க வரேன்!!
இப்படி நான் காத்த ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸ்,பெப்பர் சிக்கன் ரகசியமானது என் பெண் தோழி ஒருவரால் துப்பறியப்பட்டு,கண்டுபிடிக்கப்பட்டது.
அவளால் பலமுறை கடிந்துக் கொள்ளபட்டாலும் எச்சரிக்கப்பட்டாலும் என்னால் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலவில்லை.
ஒரு முறை மின்சார ரெயிலின் கூட்ட நெரிசலில் நாங்கள் இருவரும் சிக்கி எங்கள் சுவசத்தையும் , ஸ்பரிசத்தின் வெபப்தையும் பரிமாறிக்கொண்டு பயணித்தோம்.நிறுத்தம் வர இறங்கி அவள் என்னை அழைத்து சென்றது ஒரு ஆயத்த ஆடை நிலையத்திற்கு!
அங்கு ஒரு வெள்ளை சட்டையை வாங்கி எனக்கென பரிசளித்தவள் " உனக்கு எப்ப கோபமோ , ஆதிரமோ வருதோ அப்ப ஒரு வெள்ளை சட்டைய வாங்கு" என என் கையில் அந்த சட்டையை திணித்து "இனி தயவு செஞ்சி அந்த மிளகா சொத்த திங்காத" என்றாள்.
இது என்னடா புது சோதனை என எண்ணிய நான் "சோதிச்சிதான் பாப்போமே" என தொடங்கினேன் என் வெள்ளை சட்டை கொள்முதலை!!
வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரமெற, என் அலமாரி முழுவதும் வெள்ளை சட்டைகளானது!!!
நாட்கள் கடந்தன..
அனுபவ முடிற்சியினால் யோசிக்க தொடங்கினேன்.
கோபப்பட்டு ...
சாப்பிட போன 100 - 200 செலவு !!
உடலுக்கு கேடு
வெள்ளை சட்டை எடுத்தா 1000 - 1500 செலவு !!! காசுக்கு கேடு
இதுக்கு என்ன செய்யலாம்??
ஒரே வழிதான் ...கோபத்தை விட்டு விடலாம்!!!
ஆம் நம்மை எளிதாக உணர்ச்சிவசப்பட செய்யும் மனிதர்களிடம் இருந்தும், செயல்களில் இருந்தும், விலகி இருத்தல்!!
இருந்தால்??
காசு மிஞ்சும்..உடலும் உள்ளமும் நலம் பெறும்.. மனதிற்கு நிம்மதி!!
உணர்ந்தேன் அதையே தொடர்ந்தேன்!! இன்றும் தொடர்கிறேன்!!!
கல்லூரி காலத்து பெண் தோழி "வெள்ளை நிறம் உனக்கு பொருந்துகிறது" என்பார் என்னிடம்.
ஆதலால் தான் ஏனோ ஸ்செஸ்வன் ஃப்ரைட் ரைஸ்,பெப்பர் சிக்கனை களைந்த என்னால் இந்த வெள்ளை சட்டையின் மேல் இருக்கும் மோகத்தை இன்றுவரை களையமுடியவில்லை!!
2021
இன்றும் நான் வெள்ளை சட்டை அணிகையில் " எவள நெனசிட்டு உங்க அப்பன் வெள்ளை சட்டை போட்டிருக்கான் இன்னைகுனு தெரியல" என என் பிள்ளைகளிடம் ஏளனமும்,நக்களுமாக நையாண்டி செய்கிறாள் , என் முன் கதை முழுவதுமாக அறிந்த என் மனைவி!!!!
- தினேஷ் ஜாக்குலின்