பொன் திருவோணம்
சிவந்த கன்னத்தில் மலர்ந்த
புன்னகை வரங்கள் அருள
சூடிய பூமணம் மயக்கம் கொடுக்க
தனங்கள் தழுவிடும் தங்க சங்கிலி
உதடுகள் கடித்த காயங்கள் சொல்ல
சிறுத்த இடையை செக்கச் சிவந்த
நல்முலையை மறைக்கும் முண்டு
பெண்மை பேசும் பெருங்கவியென
சிலிர்த்து அடங்கும் பூனை மயிர்கள்
ஆதிக்கம் மேல்உதடு தொடங்கி
கீழ்உதடு வரைக்கும் புகழ் மேவிட
தனித்த விரல்களும் காவியம் பேச
ஆதி இசையினை அபிநயம் பிடிக்க
பொன் திருவோணம்
மஞ்சளாய் மணக்குது அங்கே!
மனம் மயங்குது இங்கே! இங்கே!