கறுப்பி
கறுப்பி
அண்ணன்கள்
சட்டி ஒன்றை சுட்டியே
என் மகளை நகைத்திடுவர்.
உறவினரோ
உலக அதிசயம் போல்
என் மகளை பார்த்திடுவர்.
பள்ளியிலே
பிள்ளைகள் கறுப்பி என
என் மகளை கூப்பிடுவர்.
தினம்
என் மகள் வதங்கிடுவாள்.
ஒருநாள்,
அப்பா நான் எனி
பள்ளி போகமாட்டேன்,
என்றே அடம் பிடித்தாள்.
அணைத்தே அவளை
கேளம்மா இதை,
" கண்ணனும் கறுப்பு
கல்லில் தெரியும்
அம்மனும் கறுப்பு
கவனி அம்மா அதை.
கறப்பு என்பது நிறம்,
அது அழகல்ல**
என்றும்,
அன்பாக சொல்லி வைத்தேன்.
அன்று முதல்
ஒரு மாற்றம்,
அடுத்து நடந்த பரிட்சையிலே,
என் மகள்தான்
முதற்பிள்ளை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்
** நாம் தமிழர் சீமான்
வரிகளிலிருந்து.