நிலவுக்கு ஒப்பான மனித வாழ்க்கை

நிலவுக்கு ஒப்பான மனித வாழ்க்கை
நாம் அனைவரும் வானத்தில் தோன்றும் நிலவை பார்த்து அதன் அழகை ரசிக்கின்றோம் அதனை பலவிதத்தில் வர்ணிக்கின்றோம். ஏன் கவிஞர்கள் பலர் பலவிதத்தில் கவிதை மற்றும் மேற்கோள்கள் எழுதுகிறார்கள் பலவிதத்தில். ஆனால் அந்த அழகு நிலவுக்கு எவ்வளவு துன்பங்கள் உள்ளன என்று யாரும் அதன் மறுபக்கத்தை பார்ப்பதில்லை. நமக்கு தெரிவதெல்லாம் அதன் அழகு மட்டுமே.

நிலவு போன்று நடப்பு காலத்தில் பலரது வாழ்கை உள்ளது. பலர் பிறருக்காகவே பல துன்பங்களை சுமந்துகொண்டு வெளி உலகிற்கு போலியான அழகை காண்பித்து வாழ்ந்து கொண்டுள்ளனர். இன்றய நவீன உலகில் யாரும் யாரை பற்றியும் கவலை படுவதில்லை அவர் அவர்கள் நன்றாக வசதி வாப்புகளோடு வாழ்ந்தால் போதும் என்ற சுயநலத்திலேயே பயணிக்கின்றனர். அதனால் யாருக்கும் மற்றவர்களின் துன்பம் பற்றி தெரிவதில்லை யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை. பலரது வாழ்கை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது நிலவு போல அழகத்தான் தெரிகிறது அனால் அவர்கள் மறுபக்கம் யாருக்கும் தெரிவதில்லை அவர்கள் அதை சொல்ல விரும்புவதில்லை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவது கிடையாது.

அழகு நிலவு சில நாட்கள் முழு நிலவவும் சில நாட்கள் அரை நிலவாகவும் பல நாட்கள் தோன்றாமலும் போய்விடுகிறது ஆனால் யாரும் அதைப்பற்றி பெரிதா யோசிப்பதில்லை கவலைப்படுவதில்லை. அதற்கான காரணம் அதனை சுமக்கும் வானத்திற்கும் காவல்காக்கும் நட்சத்திரங்களுக்கு மட்டுமே தெரியம் நிலவின் உண்மையான நிலைப்பாடு. எப்படி ஒருகுழந்தையின்உண்மையான நிலை தாய் தந்தைக்கு புரியுமோ அதுபோல்.

அது போல்தான் மனிதர்களின் பலருடைய உண்மையான நிலைப்பாடு அவர்களோடு பயணிக்கும் நெருக்கமான உறவுக்கும் அவர்களோடு பழகும் உண்மையான நெருங்கிய நட்புக்கு மட்டுமே தெரியும். பொதுவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்களின் அழகான வாழ்கை மட்டுமே தெரியும்.

. ஒவ்வொரு அழகுக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு சோகம் இருக்கும். ஆண்டவன் எப்படி மலருக்கு அத்தனை அழகையும் மணத்தையும் கொடிகொடுத்து இறுதியாக அதன் வாழ்க்கையை ஒரு நாளிலேயே முடித்துவிடுகிறது அப்படித்தான் அனைத்தும் என்பதை மனிதன் மனதில் பதியவைக்க வேண்டும். நம்முடைய அழகு வெளித்தோற்றம் பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருக்கும் ஆனால் நம்மை ஒருபக்கம் நலிவடைய செய்துகொண்டருக்கும். மற்றவர்கள் பெருமை படுத்துவதற்கு நம்மை பற்றி பெரிதாக நினைப்பதற்கு மேலும் வர்ணிப்பதற்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் ஆனால் தெரியும் வாழ்பவர்களுக்குத்தான் அதன் சிரமம்.

நிலவின் அழகை பல கோணங்களில் ரசிக்கும் நாம் அதன் சோகத்தையும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். நிலவின் அழகை பற்றி பல விதத்தில் வர்ணிக்கின்றோம் அதன் மூலம் கிடைக்கும் ஒளியை பயன்படுத்திக்கொள்கிறோம். மேலும் பலர் கவிதையாகவும் மேற்கோள் ஏழுதியும் பணம் சம்பாதிக்கின்றனர் ஆனால் நிலவு நம்மிடம் இருந்து எந்த ஆதாயமும் அடைவதில்லை நாமும் அதைப்பற்றி யோசிப்பதில்லை கவலைப்படுவதில்லை.

அது போல்தான் பல மனிதர்கள் இந்த உலகில் உள்ளனர். பிறரிடம் பயனடைகின்றனர் அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர் அதன் மூலம் உயர்ந்தநிலைக்கு வருகின்றனர் ஆனால் வந்த வழியையும் அதற்கு காரணமானவர்களையும் மறந்து விடுகின்றனர். இப்படி நிலவுக்கு ஒப்பாக இருக்கும் போலியான அழகு வாழ்க்கை மனிதநேயத்தை மறந்த மனித வாழ்க்கை வரும் காலங்களில் மனிதநேயம் உள்ள மனித வாழ்க்கையாக மாறவேண்டும் அப்பொழுதுதான் நாம் கொரோன போன்ற கொடிய நோய்களில் இருந்து தப்பிக்க முடியம் அமைதி கிடைக்கும் வாழ்க்கை சிறக்கும் செழிக்கும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (23-Aug-21, 7:27 am)
பார்வை : 122

மேலே