மருத்துவ விபச்சாரம்
உடலுறவால் நோயுறவே வந்ததொரு கிருமியுமே
தாய்ப்பால் குடிப்பதனால் நோயுறும் என்றனரே
பழையச்சோறு உண்பதனால் காசம் வருவதாகவும்
குச்சியால் பல் துலக்க ஈறும் சிதையும் என்றனரே
புழுதியில் விளையாடுவதே சிரங்குக்கு காரணமாம்
வெல்லத்துக்குப் பதிலாக வெண் சர்க்கரை என்றனரே
மோரைக் குடித்தாலே சளி பிடிக்கும் என்று கூறி
வண்ண நிற நீரினையே கண்ணாடி புட்டியினுள்
கச்சிதமாய் அடைத்து வைத்து ஆரோக்கியம் என்றனரே
வடகத்துக்கு பதிலாக சீனா உப்பைத் தந்தனரே
இவையெல்லாம் பழக்கிய போது புது நோய் வந்துவிட
குருதியில் கூடிவிட்ட இனிப்பால் நோயென்று
கும்மாளமாய் எங்குமே மருத்துவமனை திறந்துவிட
குண்டு ஊசி தைத்தாலும் உயிர் போய்விடும் என்றே
குடும்பத்தினரை பயமுறுத்தி மருந்துகள் வாங்கிவிட
மருந்தாளுனர் என்ற பிரிவை புதியதாய் உருவாக்கி
மாதத்தின் 32 நாளும் மருந்தோடு வாழவைக்க
முயன்ற மருத்துவ உலகின் பணப் பசிக்கு
வருமானம் போதவில்லையோ அதனால் இப்பொழுது
கிரீட நோயை உருவாக்கி மருத்துவ விபச்சாரம்
செய்கின்ற அறிவாளிகளுக்கு இயற்கை ஒருநாளில்
முடுக்கம் கொள்ளும்போது புவியும் புரளுமே.
------ நன்னாடன்.