ஓடம்

ஓடத்தில் வந்தவர்களும்
ஒடத்தின் சொந்தக்காரனும்
கரை வந்தவுடன்
கரையேறி
சென்று விட்டார்கள் ..!!

ஓடம் மட்டும்
கரையினில் தனியாக ..!!

சிலரது வாழ்க்கையும்
ஓடம் போல்தான் ..!!

தங்களது
இளமை பருவத்தில்
பலரது வாழ்க்கை
உயர்வதற்கு
ஓடம் போல் உதவியாக
இருந்தவர்கள் ...!!

தங்களது
முதுமை பருவத்தில்
ஓடம் போல்
ஓரத்தில் தனியாக ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Aug-21, 1:39 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : odam
பார்வை : 194

மேலே