பொன்னாவாரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வெடிப்பு துவக்குதிரல் மேகப் புடைகள்
தடிப்பு தினவுகடி தங்கா - அடிக்கடியிங்
கென்னா வறைய விசையா வெழிலணங்கே
பொன்னா வரையதனைப் போற்று
- பதார்த்த குண சிந்தாமணி
தோல் வெடிப்பு, சொறியும் போது தோல் தூள்விழல், மேகப்புடை, தடிப்பு, அரிப்பு, காணாக்கடி ஆகியவை போகும்