இஞ்சிலா

அமெரிக்காவில் வாழும் பேரன் முன்ஸ் (முனியன் என்று தனக்குச் சூட்டப்பட்டிருந்ந தன் தாத்தா பெயரை இந்தியாவில் பொறியியல் படிக்கும் போதே 'முன்ஸ்' என்று மாற்றிக்கொண்டான்) தன் பாட்டியை செல்பேசியில் அழைக்கிறேன்:

அலோ ஆரு பேசறது?
######
நாந்தான் பாட்டி உங்க பேரன் முன்ஸ் பேரன் பேசறேன்.
@@####
டேய் பேரா முனியா நல்லா இருக்கிறயா சாமி. உந் தாத்தா பேரை அவுரு நாபகமா உனக்கு முனியன்னு பேரு வச்சோம். அதை நீ 'முனுசு'ன்னு மாத்திகிட்ட. சரி. பரவால்ல. உன்னோட மனைவி 'கண்ணுசு' (கண்ணம்மா என்ற பெயர் 'கண்ஸ்' என்ற பெயர் மாற்றம் பெற்றது) நல்லா இருக்கிறளா? நல்ல தகவல் உண்டா?

#######
அதுக்குத்தான் பாட்டி உங்கூடப் பேசறேன். அவளுக்கு ஆளாக ஆண் குழந்தை நேத்து இரவு பொறந்தது. குழந்தையும் என் மனைவி 'கண்ஸு'ம் நல்லா இருக்கிறாங்க.
######@@
ரொம்ப சந்தோசம்டா பேரா.
@@@@@
நான் இன்னிக்கு காலைலயே நம்ம குடும்ப சோதிடருக்குத் தகவலைச் சொல்லி பையன் பொறந்த நேரம், நட்சத்திரம், ராசி, லக்கினப்படி நல்ல இந்திப் பேரா வைக்கச் சொல்லிக் கேட்டேன். அவுரு "பேரோட கடைசி எழுத்து 'லா'வில முடியற மாதிரி உள்ள பேரா வைக்கச் சொன்னாரு. 'ஷுக்லா' னு வைக்கலாமானு 'கண்ஷு'கிட்ட கேட்டேன்.
@@@#@@@
என்னடா பேரா திரும்பத் திரும்ப 'கண்ணுசு, கண்ணுசு'னு சொல்லிட்டு இருக்கிற? கண்ணம்மா. எவ்வளவு அழகான பேரு.
#########
அதை விடுங்க பாட்டி. பையனுக்கு என்ன பேரு வைக்கலாம்னு சொல்லுங்க பாட்டி.
#########
தொலைக்காட்சி செய்தில அடிக்கடி 'சுக்குலா'ங்கிற பேரைச் சொல்லறாங்க. ஏற்கனவே நம்ம நாட்டில ஆயிரக்கணக்கான 'சுக்குலா' (ஷீக்லா) இருப்பாங்க. அந்தப் பேரு வேண்டாம். இஞ்சி இல்லாம சுக்கு கெடையாது. முத்துன இஞ்சியை வெயிலில நல்லா காய வச்சாத்தான்டா முனியா சுக்கு கெடைக்கும்.
அதனால எம் பேரனுக்கு 'இஞ்சிலா'னு பேரு வையுடா.
########
'இஞ்சிலா'வா? அதுமாதிரி பேரே இந்தில இல்லையே பாட்டி!
@@###@@@@
கண்டபடி பேரு வைக்கிறதுதான்டா நாகரிகம். உங் கொழுந்தியாவோட பொண்ணுக்கு 'பூவிசா' (பூவிஷா)ன்னு வச்சிருக்கிறாங்க. நம்ம சோசியர் சொன்னாரு "அந்த மாதிரி பேரு உலகத்தில எந்த மொழியிலும் இல்ல. நம்ம சனங்க புதுமையான பேரா வைக்கணும்னு ஆசப்பட்டு இந்திப் பேரு மாதிரி இருக்கிற பேருங்கள உருவாக்கி வச்சுக்கிறாங்க. நீ துணிச்சலா எம் பேரனுக்கு 'இஞ்சிலா'னு பேரு வையுடா. அந்தப் பேரைக் கேட்டு பலபேரு அவுங்க கொழந்தைங்களுக்கு 'இஞ்சிலா'னு பேரு வச்சிருவாங்க. 'இஞ்சிலா' இந்திப் பேரு ஆயிடும்டா முனியா.
@@###@@#
சரிங்க பாட்டி. நான் பெரிய படிப்புப் படிச்சுட்டு பெரிய வேலைல சேந்து மாசம் பத்து லட்சம் சம்பளம் வாங்கிறேன். என்னை இன்னும் 'முனியா, முனியா'னு கூப்படறீங்களே. இது உங்களுக்கே நல்லா இருக்குதா பாட்டி.

#######
போடா முனுசு. முனுசுச் செல்லம்.

எழுதியவர் : மலர் (6-Sep-21, 7:01 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 72

மேலே