வெட்பாலை மரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அக்கினியை வைத்திருக்கும் ஆர்ந்தவா தம்போக்குந்
திக்கு(ள்)திரி தோஷத்தைத் தீர்த்துவிடும் - சொக்கவிரு
கட்பாலைக் கூற்றைவைத்த கான மடமயிலே
வெட்பாலை நல்மருந்தாம் விள்

- பதார்த்த குண சிந்தாமணி

சூட்டையுண்டாக்கும் குணமுடைய இம்மரம் வாத வலி, திரிதோடம் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-21, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே