பத்திக்கிச்சு தொத்திக்கிச்சு
பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு
தொத்திக்கிச்சு
தொத்திக்கிச்சு
காதல் நோய்
தொத்திக்கிச்சு
நான் தானா
நானே தானா
சிடுமூஞ்சி
சிரித்த முகமானது
அவள் மட்டுமா அழகு
இல்லை இல்லை
எல்லாமே அழகு தான்
பத்திக்கிச்சு
தொத்திக்கிச்சு....
இலையில் தூங்கும்
குழந்தை என பனித்துளி
தாய் வயிற்றிலிருந்து
பிரசவிக்கும் சிசுவாக
இளஞ்சூரியன்
அவளின் பிரகாச
முகமாக பால் நிலவு
அவள் ஆனந்த சிரிப்பாக
மின்னும் நட்சத்திரம்
கரு மேகமென காற்றில்
அலையும் அவள் கூந்தல்
எல்லாமே அழகு தான்.
பத்திக்கிச்சு
தொத்திக்கிச்சு....
அட! எனக்கும்
கவிதை வருகிறதே
காதல் நோய்
வந்தால்
கழுதைக்கும் கவிதை
வரும்
தவளையும் தாளம்
போடும்
அடி மாடும் ஆனந்த
கூத்தாடும்.
பத்திக்கிச்சு
தொத்திக்கிச்சு....
நெஞ்சமெல்லாம்
பஞ்சு மிட்டாய்
உள்ளமெல்லாம்
ஊர்கோலம்
இதயமெல்லாம்
இனியவளே
எண்ணமெல்லாம்
என்னவளே
பத்திக்கிச்சு
தொத்திக்கிச்சு.....
குண்டு குண்டு
கண்களால்
தூண்டில் போட்டாய்
அதில் சிக்கி கொண்ட
மீனாக நான் தவிக்கிறேன்
காதல் என்னும் கப்பலில்
ஏறிவிட்டேன்
மதம் என்ற திமிங்கலத்தால்
ஆழ்கடலில் அமுக்கப்படுவேனா
சாதி என்ற சூறாவளியால்
சூறையாடப்படுவேனா
இல்லை வெற்றி என்ற அக்கரைக்கு
சென்று அவள் கரம் பிடிப்பேனா..
காதல் என்ற பொது மறையை
யார் கண்டுபிடித்தது
இறைவனா?
இயற்கையா?
- பாலு.
.