குற்றம்
யார் குற்றம்?.
வீரியமற்ற
விதைகளை
விதைத்து விட்டு
ஏன்
செடிகள் மீது
குற்றம் சொல்கிறீர்கள்?.
விதைகள்
உங்களுடையது தானே?
நாற்றுகள்
நாற்றங்காலிலிருந்து
வந்தாலும்...
இளைஞர்களை
குற்றம சொல்லாதீர்கள்
பெருமை கொண்ட
பெரியோர்களே...
✍️கவிதைக்காரன்