மௌனம் சம்மதமல்ல
மௌனம் சம்மதமல்ல.
.....................................
யாருக்காகவோ
எழுதிய
கவிதை,
மௌனத்தின் வார்த்தைகளில்.
மௌனமாக
இருக்க வேண்டிய
நேரங்களில்
நான் பேசினாலும்
நான்
பேச வேண்டிய
நேரங்களில்,
மௌனமே
பேசித் தொலைக்கின்றது.
சந்தோஷமான
அல்லது
துக்கமான
தருணங்களில்,
ஒரு
மௌனத்தில்
ஒளிந்திருக்கும்
ஓராயிரம்
வார்த்தைகள்.
மகிழ்வை
காட்டிக் கொடுக்கும்
மௌனங்கள்
மகத்தானவை.
சந்தோஷமோ...
துக்கமோ...
அதை
இரட்டிப்பாக்குகிறது
மௌனம்.
மறுத்துப் பேசுவதை விட,
மௌனமாக மறுப்பதில்
வலி அதிகம்,
எதிராளிக்கும்
நமக்கும்.
எனவே
புரிந்து கொள்ளுங்கள்,
எப்போதுமல்ல....
சில நேரங்களில்
மௌனம்
சம்மதம் அல்ல.
.
#கவிதைக்காரன்