ஆசிரியர்
ஆசிரியர்
☹️☹️☹️☹️☹️☹️☹️☹️
வெள்ளை வேட்டி தள்ளிப்போகும் சைக்கிள்
கையில் குடை கதர்த்துணிச் சட்டை
கணத்த கண்ணாடி தடித்த நரைமீசை
இவைதானே அடையாளம் இன்றென்ன இம்மாற்றம்...
மீட்டிடு அப்படி மீளட்டும் கலாச்சாரம்
அரசின் மூளையில் உதித்திட்ட சமாச்சாரம்...
சத்தமிடாப் பள்ளிமணி குப்பைவிழா வகுப்பறை
இல்லாத பயிற்சி இருந்தாலும் தேர்ச்சி...
அலைபேசி மாணவனாய் போட்டிடும் வேடம்
அதன்முன்னே ஆசிரியர் நடத்திடும் பாடம்...
பைத்தியம் பிடிக்க வகுப்புகள் எடுத்தோம்
வைத்தியம் பார்க்க ஒருசம்பள பிடித்தம்...
முற்றிய நிலையில் முடியா விட்டால்
சத்தியம் சடங்கை அரசே பார்க்கும்...
ஈமச்சடங்கிற்கு இருலட்சம் உயர்வு
வாங்கும் சம்பளம் அறுபது குறைவு...
வரிப்பணம் ஒருரூபாயில் அறுபது நமக்காம்
அவர்கள் செலவுக்கு அதிலென்ன இருக்காம்...?
வீதியில் கிடப்பவனை ஒப்பிட்டு
ஊதியம் கேட்டிடில் தலைக்கொட்டு...
அரசியல் சிற்பியால் அடிபடும் சிலைகள்
உடைபட்டு ஆகும் வடிவற்ற கற்கள்...
ஆயிரம் பொய்சொல்லி அமைத்திட்ட ஆட்சி
அப்பாவி நமக்கென்ன தப்பான ஆசை...
அரிச்சந்திரன் பாடத்தை வகுப்பறையில் நடத்தி
அதைஇன்னும் நம்பும் அப்பாவி வாத்தி...
நாமெல்லாம்...
குடியரசு தலைவராய் உயர்வது எங்கே
குடும்பத் தலைவராய் வாழ்ந்திட்டால் போதும்...
😢😢😢😢😢😢😢😢😢😢😢