8 அன்பு மொழி பேசிவிட்டால் - தாத்தா பேத்தி தாலாட்டு
8. அன்பு மொழி பேசிவிட்டால் - தாத்தா பேத்தி தாலாட்டு
அன்பு மொழி பேசிவிட்டால்
அனைவருக்கும் பிடித்திடுமே - நீ
அன்பு மொழி பேசிவிட்டால்
அனைவருக்கும் பிடித்திடுமே
கண்ணில் கருணை பொழிந்துவிட்டால்
பிறர் துன்பம் கரைந்திடுமே - உந்தன்
கண்ணில் கருணை பொழிந்துவிட்டால்
பிறர் துன்பம் கரைந்திடுமே
உதவி கரம் நீட்டிவிட்டால்
சிலர் துயரம் நீங்கிடுமே - நீ
உதவி கரம் நீட்டிவிட்டால்
சிலர் துயரம் நீங்கிடுமே
பேச்சில் பணிவு இருந்துவிட்டால்
எங்கும் மதிப்பு உயர்த்திடுமே - உந்தன்
பேச்சில் பணிவு இருந்துவிட்டால்
எங்கும் மதிப்பு உயர்த்திடுமே - இனி
எங்கும் மதிப்பு உயர்த்திடுமே
அன்பு மொழி பேசிவிட்டால்
அனைவருக்கும் பிடித்திடுமே
அனைவருக்கும் பிடித்திடுமே
செய்யும் தொழிலை நேசித்தால்
செயலில் திறமை வெளிப்படுமே - நீ
செய்யும் தொழிலை நேசித்தால்
செயலில் திறமை வெளிப்படுமே
பாசத்தோடு பழகி வந்தால்
குறைகள் பெரிதாய் தெரியாதே - நீ
பாசத்தோடு பழகி வந்தால்
குறைகள் பெரிதாய் தெரியாதே பிறர்
குறைகள் பெரிதாய் தெரியாதே
அன்பு மொழி பேசிவிட்டால்
அனைவருக்கும் பிடித்திடுமே
அனைவருக்கும் பிடித்திடுமே
நேர்மை சத்தியம் கடைபிடித்தால்
பயந்து வாழ தேவையில்லை - நீ
நேர்மை சத்தியம் கடைபிடித்தால்
பயந்து வாழ தேவையில்லை
நெஞ்சில் இறைவன் இருந்துவிட்டால்
வாழ்க்கை சிறப்பாய் அமைந்திடுமே - உந்தன்
நெஞ்சில் இறைவன் இருந்துவிட்டால்
வாழ்க்கை சிறப்பாய் அமைந்திடுமே- எந்நாளும்
வாழ்க்கை சிறப்பாய் அமைந்திடுமே
அன்பு மொழி பேசிவிட்டால்
அனைவருக்கும் பிடித்திடுமே - நீ
அன்பு மொழி பேசிவிட்டால்
அனைவருக்கும் பிடித்திடுமே
கண்ணில் கருணை பொழிந்துவிட்டால்
பிறர் துன்பம் கரைந்திடுமே - உந்தன்
கண்ணில் கருணை பொழிந்துவிட்டால்
பிறர் துன்பம் கரைந்திடுமே

