பேசும் கண்கள் பேரழகு
![](https://eluthu.com/images/loading.gif)
எண்ணையும் இல்லாமல்
திரியும் இல்லாமல்
சுடர்விடும் தீபமாய்
ஸ்ரீவித்யாவின் விழிகள்
இனி இருள் ஏது
இரவுகள் ஏது அவள்
கண்கள் காணும்போது
இன்ப கனவுகள் ஒருகோடி
அந்த கண்களின்
வார்த்தைகள் பலகோடி
கண்களின் மை எடுத்து
காகங்கள் வண்ணம்
கொண்டதோ அந்த காமனும்
இன்பம் கொண்டானோ
ரதி இவள் கண்ணசைவில்
கரும்பும் வளைந்து வில்லாகுமே
உறுதியான மலரின் மனதில்
தேனும் ஊற்றாகி நதியாகுமே
ஒரு கோபப்பார்வை அவளும்
பார்த்தால் அதன் ஆழத்தில்
காதலும் கனிவும் அன்புச் -
சுரங்கத்தின் வழிகாட்டுமே
கண்மணியவள் பேசும்
கண்களை ரசித்து நின்றால்
பூமி சுற்றுவதைப்போல்
போதையில் சுற்றிடுவோம்
சோமபானம் அருந்தாமலே
ஸ்ரீவித்யா கண்களின் பேரழகை
கண்ணதாசன் தமிழ் படியெடுக்க
அந்த மையிட்ட கண்களுக்குள்
தேடுதல் என்பதே சுவாரஸ்யமே...