🖤முரண்பாடு🖤

சீற்றம் மிகு ஆழிப்பேரலையாய்
ஆழ்மனதும்
ஆழ்கடல் மரண அமைதியாய்
முகம் காட்டும் பெண்கள்
இயலாமை!!!
கட்டுப்படுத்தும் அங்குசம் இரண்டு,
அன்பால் தம்மை அறியாமல்
தாமாகவே பாசச்சிறையில் கட்டுண்டு
கிடப்பது
மரணத்திற்கு இணையானது!
அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு
உயிர் பயத்தால் அடங்கி
கிடப்பது
மதில் மேல் பூனை!!!

எழுதியவர் : கவி பாரதீ (12-Sep-21, 8:01 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : muranpaadu
பார்வை : 64

மேலே