தொலைந்து போவது

யாராவது
திடீரென
காணாமல் போய் விட்டால்,
அதை நாம்
ஏற்றுக் கொள்வது
அத்தனை எளிதா....?

வெறுப்பைக் கூட
தாங்கிக் கொள்ளலாம்.
கண்ணில் படாமல்
தொலைந்து போய்
அன்பு காட்டுவதை
எப்படி
தாங்கிக் கொள்வது...?

எங்கே போனாய்
என்றே
தெரியவில்லை...
உன் சாவு
எனக்குத் தரும்
வலியை விடவும்
கொடூரமானது
நீ
என்னிடமிருந்து
தொலைந்து
போவது....





✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (12-Sep-21, 11:39 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : tholainthu povathu
பார்வை : 122

மேலே