வா மீண்டும் ஒருமுறை காதல் செய்வோம்

அறிவிப்புகள் இல்லாமல் அறிமுகம் செய்து கொள்வோம்..
காரணங்கள் ஏதுமின்றி நம் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்வோம்..
விளக்கங்கள் ஏதுமின்றி விடியும் வரை காத்திருப்போம்..
நம்முடைய ஒவ்வொரு நொடி சந்திப்பிலும் சந்தோசம் கொண்டிருப்போம்..
இருவரும் கைவிரல்கள் கோர்த்து பல மைல் தூரம் பயணப்படுவோம்..
உனக்காக நானும் எனக்காக நீயும் மீண்டும் ஒரு முறை உயிர்பிப்போம்..
உண்மையே நம்மிடம் தோற்றுப் போகும் அளவுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வோம்..
நாம் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத வித்தகர்கள் என்று விமர்சனம் பெறுவோம்..
பார்ப்பவர்கள் பொறாமையில் பொசுங்கும் அளவிற்கு அன்பில் அளப்பரிவோம்..
சில நேரங்களில் காலத்திற்கு கட்டளையிட்டு காத்திருக்க செய்வோம்..
எனக்கான சுவாசங்கள் உன்னிடமும், உனக்கான சுவாசங்கள் என்னிடமும் இருக்கும் வரை,
வா மீண்டும் ஒருமுறை காதல் செய்வோம்....

எழுதியவர் : குட்டி புவன் (13-Sep-21, 7:40 am)
சேர்த்தது : குட்டி புவன்
பார்வை : 189

மேலே