முள்ளும் மலராக

**************
பகலைக் கண்ணால் பார்த்துவிட வேண்டுமென்று
பகல் கனவு கண்டிருக்கலாம் வௌவால்.
*
இரவில் ஒருநாளாவது உதித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம் சூரியன்
*
கடலில் ஒருநாள்
குளித்துவிடவேண்டும்
என்று எண்ணியிருக்கலாம் இமயம்
*
சிகரத்தை ஒருமுறை
தொட்டுப் பார்க்கவேண்டும் என்று
சிந்தித்திருக்கலாம் கடல்
*
பனித்துளிமேல் சிறுநொடி
உட்கார முனைந்திருக்கலாம் புல்நுனி
*
திரேசாவாய் ஒருநாளாவது
வாழ முற்பட்டிருக்கலாம் கருணை
*
யார் கண்டது
முள்கூட மலராகியிருக்கலாம் உனக்காய் ..
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-May-24, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 98

மேலே