அன்றங்கே ஒரு வீடிருந்ததே

அன்றங்கே ஒரு வீடிருந்ததே
10 / 05 / 2024
அன்றங்கே ஒரு வீடிருந்ததே
வீட்டிற்குள் உறவிருந்ததே
உறவினிடை அன்பிருந்ததே
பாசமெனும் நூலிருந்ததே
பாட்டி சொன்ன கதையிருந்ததே
கதைக்குள்ளே வாழ்விருந்ததே
வாழ்ந்து முடித்த தாத்தாவோட
அனுபவ சொல்லிருந்ததே
அப்பாவின் அயராத உழைப்பிருந்ததே
அம்மாவின் அறுசுவை உணவிருந்ததே
உடன்பிறப்பின் அணைப்பிருந்ததே
சிறுசிறு சண்டைக்குப்பின்
சமாதான நிலையிருந்ததே
கலகல சிரிப்பிருந்ததே
கலக்கமில்லா வாழ்விருந்ததே
சோர்ந்தபோது தலைசாய்க்க
சொந்தங்களின் தோளிருந்ததே
அத்தனையும் கனவாய் போய்
தனித்தனி தீவானதே
தனிக்குடும்ப சிலந்திவலையில்
சிக்கித்தான் சீரழிந்ததே
மனிதநேயம் காற்றில் கரைந்து
செத்துத்தான் போனதே
கல்லறைக்குள் அடங்கி வெறும்
கல்லாய்த்தான் போனதே
முக்கட் வேம்பையம் எழுதிய மலையாள பாட்டின் கருவிற்கு வேறொரு வர்ணம் பூசி நான் எழுதிய கவிதை

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-May-24, 8:44 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 23

சிறந்த கவிதைகள்

மேலே