ஒரு வயது என்பதினால்

பூ மெத்தை விரித்தாலும்
தாய் மடிக்கிங்கு இணையில்ல,

தேன் மழைதான் பொய்தாலும்
பால் சுவைக்கிங்கு குறையில்ல,

அன்பான முத்தத்தால்
நனையாத நாளில்ல,

தாலாட்டு பாடிடுவா
ஏ.ஆர் இசை ஒன்னும் பெரிதில்ல,

ஒரு வயது என்பதினால்
கவி பாட தெரியவில்ல,

அழுகையாலே பாடிடுவேன்
அவள் கவி அல்ல காவியமே!!!!

எழுதியவர் : (28-Sep-11, 5:34 pm)
சேர்த்தது : sakthivelan
பார்வை : 243

மேலே