வண்ணக்கனவுகள்

வண்ணக்கனவுகள்
உன் குரலே யாழ் இசையாய்
உன் முகமே மலர்ந்த தாமரையாய்
அன்னமும் உன்னைக் கண்டதோ!
புள்ளி மானின் மெல்லிய ஓட்டம்
உந்தன் நடையின் இடைச்செருகலோ!
உன் சிரிப்பொலி தான்
கோயில்மணியாய் சதிராடியதோ?
என்னைக்கண்டு நீ தலைகுனிய
சூரியகாந்தியும் அசந்து போனதே!
மையலாளின் பிஞ்சுவிரலின்
சிவந்தநிறம் எனை வாட்ட
அழவண்ணமும் பொறாமை கொண்டதே!
உன் பாதமலர்கள் கண்டு
மல்லிகையும் நாணியதே!

எழுதியவர் : வைரமணி.ந (28-Sep-11, 6:00 pm)
சேர்த்தது : vaira31mani
பார்வை : 275

மேலே