பூவரச சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நூறாண்டு சென்றதொரு நுன்பூ வரசம்வேர்
நூறாண்ட குஷ்டைந்தொ லைக்குங்காண் - வீறிப்
பழுத்த இலைவிதைபூ பட்டையிவை கண்டாற்
புழுத்தபுண்வி ரோசனமும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

குட்டங் கடிசூலை கொல்லும் விஷபாகந்
துட்ட மகோதரமுஞ் சோபையொடு - கிட்டிமெய்யில்
தாவுகரப் பான்கிரந்தி தண்மேகம் போக்கிவிடும்
பூவரசங் காய்பட்டை பூ

- பதார்த்த குண சிந்தாமணி

நூறு வருடம் வாழ்ந்த பூவரசம் வேர் நாட்பட்ட குட்டத்தை நீக்கும்; பழுப்பு இலை, பூ, விதை பட்டை, காய் இவை கிருமி, இரணம், கழிச்சல், பெருநோய், காணாக்கடி, சூலை, குத்தல், விடபாகம் பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, நீர்ப்பிரமேகம் ஆகியவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-21, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே