வில்வ சமூலம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பல்லவம்பூ பிஞ்சின் பழமியா வும்முறையே
வல்லவம்மே கம்மந்த மாகுன்மஞ் - செல்லுகின்ற
நோக்கமருள் விந்துநட்ட நூறு மடுத்தவர்கட்
காக்கமருள் வில்லுவத்தி லாம்
- பதார்த்த குண சிந்தாமணி
இதன் தளிர் நீர்மேகத்தையும், பூ மந்தத்தையும் பிஞ்சு குன்மத்தையும், பழம் கண்ணிருளையும், பிசின் விந்து நட்டத்தையும் நீக்கும்