நீட் வேஷம்
நீட்...(வேஷம்)
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢தேர்வெழுத திராணியற்ற கோழைக்கேன் இவ்வாசை
விட்டத்திலே தூக்கிடாதே வெட்கக்கேடு அம்மரத்திற்கே...
பாட்டி வைத்தியம் படித்து கொள்ளேன்
போட்டி தேர்வு ஏதும் இல்லை...
தன்னுயிரின் மதிப்பறியாத் தகுதியற்ற மாணவனே
மண்ணுயிர் நோயுற்றால் உன்மருத்துவமே தேவையில்லை...
மண்ணில் பொருளீட்ட மகத்தான இருதொழில்கள்
மருத்துவமும் அரசியலும் போட்டியிடும் இந்நிகழ்வில்...
உன்னைத் தூக்கி தியாகி ஆக்கும்
மண்ணை ஆளும் நொன்னைகள் எல்லாம்......
அன்றாட சாலைவிபத்தில் ஆயிரம் பேர் இறக்கின்றானே
பாதைகளை ஏன் அடைக்கவில்லை பயணத்தை ஏன் தடுக்கவில்லை...
மதுக்கடையால் தினந்தோறும் வெறிக்கொலைகள் அரங்கேற்றம்
இதைத்தடுக்க ஏன்இன்னும் நடக்கவில்லை சிறு மாற்றம்...
ஐநூறுக்கு ஓட்டுப்பெற்ற அரசியலான் சட்டம் இயற்ற
ஆண்டுக்கு 100 வீதம் அடிமைசாசன ஓட்டுப் போட்டோம்...
ஊடகங்களை எல்லாம் சூழ வைத்து
ஊழை சிந்த வருதாம் வருத்தம்
அடிப்படைத் தகுதிகளை அரசியலுக்கு வைக்காததே
படிப்பைப் பற்றி கருத்துக்கூறும் பன்னாடைகளின் நடிப்புக்காட்சி...
இனி..
தகுதி பார்த்து பதவி கொடுக்க
தேர்தல் தவிர்த்து தேர்வு வைத்தால்
மந்திரி எல்லாம் தொங்குவதற்கு
மரங்கள் இங்கே நாட்டில் போதா...
☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️

