பாரதிக்கு ஒரு பாட்டு

பாரதிக்கு ஒரு பாட்டு
அச்சமில்லை என முழங்கிய பாரதிக்கு ஒரு பாட்டு
பாப்பா பாட்டுப் பாடி மகிழ்வித்த பாரதிக்கு ஒரு பாட்டு
கண்ணனை மனதில் கொஞ்சிய பாரதிக்கு ஒரு பாட்டு
ஓம் சக்தியின் வீரத்தை உணரச் செய்த பாரதிக்கு ஒரு பாட்டு
பாஞ்சாலியின் சபதத்தை பார்உரைத்த பாரதிக்கு ஒரு பாட்டு
மகளிருக்கு சம உரிமை அளித்த பாரதிக்கு ஒரு பாட்டு
நாடெல்லாம் ஓடும் நதிகளை இணைத்த பாரதிக்கு ஒரு பாட்டு
எழுத்தால் சுதந்திர எழுச்சியை வளர்த்த பாரதிக்கு ஒரு பாட்டு
எங்கும் சுதந்திரம் என முழங்கி இன்புற்ற பாரதிக்கு ஒரு பாட்டு
பாரதியின் நூற்றாண்டில் பார் போற்றும் பாரதியை பாடி மகிழ்வோம்

எழுதியவர் : கே என் ராம் (19-Sep-21, 12:01 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 40

மேலே