மூசுமல்லிகை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ய்’ இடையின ஆசு)

வீக்கமறுங் காமாலை விட்டோடுஞ் சோபைவிடும்
நீக்கமற விம்முமுலை நேரிழையே – ஏ’ய்’க்கும்
விடபாகம் மேகமும்போம் வீரியமுண் டாகும்
படர்மூசு மல்லிகைக்கும் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

சோகை, காமாலை, வீக்கம், பிரமேகம் இவை நீங்கும்; வீரிய விருத்தியுண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-21, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே