ஆனால் நாணல்லவா ஏற்றியது
பூக்களில் தேடினாலும்
கிடைக்காத மகரந்தம்...
உன் இதழ்களில் கண்டேன்!
அச்சுவை பருகிட
ஆவலும் கொண்டு
அருகில் வந்தேன்!
நாணம் கொள்ளும்
உன் விழிகள்
என்று எண்ணிக்கொண்டேன்!
ஆனால் நாணல்லவா ஏற்றியது
உன் விற்புறுவம்
கொஞ்சம் தள்ளிச்சென்றேன்!
வருந்துகிறேன் என்றெண்ணி
உன் கயல்விழிகளும்
என்னை கெஞ்சிக் கொஞ்ச...!
வந்தேனடி மானே
உன்னுடன் நானும்
காதல் கொள்ள!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
