செப்டம்பர் 22

எல்லா நேரங்களிலும்
ஒருவன் புத்திசாலியாக
இருக்க முடியுமா...?

முடியாது தான்...
ஆனால்,

அன்பில்,
வென்றால் தான்
தோல்வி....

இன்று,
அதாவது
செப்டம்பர் 22....
அவளுக்கு பிறந்த நாள்.

மனிதர்கள்தான் பிறப்பார்கள்...?
பூக்கள் பிறக்காது...
பூக்கள் மலரும்...
எனவே
மலர்ந்த நாள்
வாழ்த்துக்கள்...

என்ன கோபத்தில்
இருந்தாளோ,
தெரியவில்லை...

உனக்கும்
வாழ்த்துக்கள்...
என்றாள்.

எதற்கு...?
குழம்பினேன்...
கேட்டேன்...

அதுவா...
போய் காலண்டரை பாரு
என்றாள்...

காலண்டரை
பார்த்தேன்..

அட இறைவா...
இதென்ன
அழிச்சாட்டியம்.‌.‌‌.?.
இக்கவிதையின்
மூன்றாவது பாரா
படித்து, என்னை நானே
சமாதானப்படுத்திக் கொண்டேன்.

காலண்டரில்
போட்டிருந்தது,

செப்டம்பர் 22
உலக காண்டாமிருக தினம்.

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (22-Sep-21, 1:14 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 58

மேலே