காலடி மண்
மண்ணிலே கால் பட்டே
பல வருஷங்கள் இருக்குமோ?
சில்லென்ற மணல் சில
கால்களில் ஒட்டிக்கொண்டு கொஞ்சும்...
அழுக்குப் படாத பாதங்களில்
சில நேரம் மண் பட்டாலும்
மனதிற்கு மகிழ்ச்சியே
பொன் பட்டது போல்...
காலணி இல்லாத காலங்களே இல்லை என்றாகி
காலடி மண்ணையும் உணராமல் வளர்கிறோம்
கால் பதித்த சுவடுகள் கண்டு
கல்வெட்டுகளைப் போல் உணர்ந்தேன்...
எத்தனை பூச்சிகள் எத்தனை வகைகள்
அத்தனையும் மண் மீது மையல் கொண்டு
உரசி உராய்ந்து நடக்கும் போது
மனிதன் மட்டும் கால் படாமல் காலணியோடு...