மன்னிக்க வேண்டுகிறேன்
என் காதல் கண்மணியே
என் கையில் பேனா இருக்கு
பேப்பரும் இருக்கு
உன் அழகை வர்ணித்து
கவிதை எழுத மனசும் இருக்கு ...!!
ஆனா ..!!
உந்தன் அழகில் மயங்கிய
வார்த்தைகள்
தேன் குடித்த வண்டுபோல்
மயக்கம் கொண்டு விட்டது ..!!
மன்னித்துக்கொள்
வார்த்தைகளின் மயக்கம்
தெளியும் வரை
என் கவிதைக்காக
பொறுமையாக காத்திரு
என் கண்மணியே ...!!
--கோவை சுபா