கடைசி சந்திப்பு

நம்
கடைசி சந்திப்பு
நினைவிருக்கிறதா
உனக்கு...?.

உறவுகள்
எத்தனை
வலிமையானதானாலும்,
அதன்
ஆரம்ப புள்ளி
மறந்து போகலாம்...
ஆனால்

கடைசி புள்ளி
எப்படி
மறந்து அல்லது மறைந்து
போகும்..?.

அமைதியான பிரிவில்
அத்தனை வலி...

இருந்தாலும்,

என்றேனும்
எங்கேனும்
இக்கவிதையை
படிக்க நேர்ந்தால்,
பெருமைப்பட்டுக்கொள்...
இக்கவிதையின்
கதாநாயகி
நீதான் என்று....!

✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (24-Sep-21, 5:53 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kadasi santhippu
பார்வை : 127

மேலே