எல்லாம் எல்லாம் இயற்கை தந்த பாடம் தான்
எல்லாம் எல்லாம் இயற்கை தந்த
பாடம் தான்
எட்டிப்பார்க்க உனக்கு நேரம் இல்லை தான்
தொல்லை தொல்லை என்று நினைத்தது நீதான்
தொடரும் சோகம் உன்வாழ்வில்தான்
எங்கோ பிறந்தா காகம்
எனக்கு உறவின் ஆழத்தை சொல்லித்தரும்
இங்கே வந்த பசும்
கன்றை நாவால் நக்கி
பாசத்தைப் அள்ளித்தரும்
இருளைத்தொடரும் பகலும்
நம்பிக்கையென்னும் விடியலை
எடுத்து இயம்பும்
எங்கோ பிறந்த மேகம்
ஏங்கும் புவிக்கு மழைநீரைப்
பொழிந்தே கருணையின் பெருமையை உணர்த்தும்
எங்கே விழுந்த மழையும்
ஆறாய் நீரைச் சுமந்து
பொது உடமையைச் சொல்லித்தரும்
எங்கோ பிறந்த நாம்
இன்னும் ஏற்றத்தாழ்வுடன்
வாழ்வது துரோகம்
எங்கோ பருந்தை பார்த்து
பொரித்த குஞ்சியைக் கோழியும்
குடு குடு வென்றே
தன் சிறகுக்குள்
மறைத்தே தாய்மையின் பெருமையைக் புகட்டும்
ஆறறிவுப் பிராணி
ஆட்டுது வாலை
அய்யமற்ற அன்பை
காட்டிது இந்த நாயும்.
கூடித்திரிந்தே வனத்தில் மேய்ந்த கால்நடைகளும்
விண்ணில் பறந்த பறவைகளும்
கூடிவாழ தந்தது பாடம்
சலைக்காது சாறை சாறையாக சென்ற
எறும்புகளும்
உழைக்க தூண்டிம்
தேனைச் சுமந்த
தேனிக்கள்
சேமிப்பைக் கூறும்
விசும்பின் துளிகள்
இயற்கை தந்த கொடைகள்
கருணையின் தூவல்
கண்ணீரைவிரட்டும்
சுகம்
அழகிய பின்னல்
அதில் ஒரு ஜன்னல்
பின்னியது தூக்கனாம் குருவி
வீட்டுக்குச் ஜன்னல்
விரட்டியடிக்கும் நோயை
எங்கோ நின்ற மரங்கள்
நன்றாய் காற்றை
சிலு சிலு என்றே வீசி அனுப்புது
மண்ணும் வேரும்
அன்பின் இருக்கங்கள்
பூத்த சோலை
புதையுண்ட ஆசை
நிழலைச் சுமந்த மரங்கள்
நிற்க குடையான மரங்கள்
காய் கனியைத் தருகின்றது
சுயநலம் இல்லா மரங்கள்
சொந்தத்தை சுமந்த மரங்கள்
கண்ணுக்குத் தெரியாத காற்று
கடிந்தால்
தாங்க முடியாத சிதைவு
உணவைத் தந்த விவசாயம்
உயிரைக்காத்த மரம் செடிகொடிகள்
உலகைவிட்டு சென்று விட்டால்
உயிர்களுக்கு இடம்ஏது
காலையும் பொழுதும்
காத்திருந்து வரவில்லை
காலத்தில் இல்லை
நல்ல காலம் கெட்டகாலம்
கடமையைச் செய்வது
பொழுது
காலம் என்பது மணித்துளிகளின் தொகுப்பு
சொல்லாமலே தூவிவிட்டு செல்லும்
நில்லாமலே நடையைக் கட்டும்
நினைத்துப் பார்ப்பதற்குள்
நடந்துவிடும் காலம்.
காலம் முடிந்த நிகழ்வுகள்
கண்ணீரைச் சுமக்கும் சோகங்கள்
நாம் விதைத்ததில் வந்ததுதான்
நல்லதும் கெட்டதும்
மழலையின் சிரிப்பு
மனதிற்கு இதமான தவிப்பு
கிளியின் கொஞ்சல்
கிளு கிளுப்பு மையல்
ஆடிய மயிலின் ஆட்டம்
அழகிய நடனத்தின் ஒத்திகை
அன்பாய் குழாவிய
புறாக்கள்
அலாதியாக அழகிய காதல் காவியம்
பாடித்திரிந்த பறவைகள்
பார்த்தே பறக்கக் கற்றுக் கொண்ட மனித இனம்
ஆழ்கடல்
அளவிடமுடியாத ரகசியம்
ஆழ்மனம்
அறியமுடியாத அதிசயம்
அலையின் சீற்றம்
குமுரலின் தாக்கம்
துளி துளித் தூரல்
துவண்டவனின் நம்பிக்கைச் சாரல்
வர்ணத்தைத் தெளித்த வானம்
வந்தே வரைந்தது வர்ணஜாலம்
இயற்கையின் தேடல்
இன்ப ஊடல்
கவிஞனுக்கு பாடல்
கலைகட்டியது அழகின் தேடல்
புயலுக்குப்பின் அமைதி
பொறுத்திருந்தால் கிடைக்கும் நிம்மதி.
உணவைத்தேடி ஓடும் பறவைகள்
உழைப்பில் கிடைக்கும் சாதனை.
உரித்தது உன் சோம்பலை.
உயரே பறக்கும் பருந்து
உணவை எடுக்கும் பறந்து
உடம்பில் உண்டு ஊனம்
உள்ளத்தில் வேண்டாம்
இந்த ஊனம்
உயர்வுக்கு ஏது முடக்கம்
உயரம் இல்லாத சிகரமா
துயரம் இல்லாத உதிரமா
உதவி இல்லாத பிறவியா
உறக்கம் இல்லாத தூக்கமா
தாக்கம் இல்லாத வீக்கமா
தயக்கம் இல்லாத
துவக்கமா
துவக்கம் இல்லாத தோல்வியா
தோல்வியில்லாத வெற்றியா
இதயம் இல்லாத இரக்கமா
இரக்கம் இல்லாத ஈகையா
கலக்கம் இல்லாத கண்ணீரா
கண்கள் சுமப்பது சோகமா
சலனம் இல்லாத வெப்பமா
சருக்கம் இல்லாத இறக்கமா
மானிடா இயற்கையுடன் வாழ்ந்த நீ
சிறகைவெட்டி
பறக்கவிட்டாய்
சினத்தைக்கொட்டி
சிந்திக்க மறந்தாய்
இதயத்தை வெட்டி
பாசத்தை மறந்தாய்
மரம் பட்டபின்
வேருக்கு நீர் ஊற்றப்பார்க்கின்றாய்
வெந்தபின் வெண்நீர் ஊற்றப்பார்க்கின்றாய்
நொந்தபின் நினைத்துப்பார்க்கின்றாய்
நோய் வந்தபின் துடிக்கின்றாய்
சுட்டபின் சூட்டை ஆ என்றே சாடுகின்றாய்
சுமையைச் சுமந்தபின்
சொல்லிக் கதருகின்றாய்
எல்லாம் உண்டு இயற்கையில்
எட்டவில்லை
மனிதனின் புத்திக்கு
குயில் தந்தது கீதம்
காற்று தந்தது விசையை
காதல் தந்தது சுவையை
எல்லாம் எல்லாம் இயற்கை தந்த பாடம் தான்

