முகம் ஒன்று
முகம் ஒன்று.
தூரத்தில்
ஓர் ஒளிக் கீற்று,
அதன் நடுவே
ஓர் முகம் ஒன்று.
அதை நான்
பார்ப்பதற்கு,
ஓடினேன்
சில நாட்கள்,
ஓடினேன்
பல மாதங்கள்,
ஓடியே சென்றது
பல வருடங்கள்.
அங்கடைந்தே!
அதன் காலடியில்
வீழ்ந்த போது,
அள்ளி அணைத்தது
அந்த முகம்,
அந்த முகத்தின்
மறுபுறத்தில்,
கண் கூசும்
வெளிச்சம் இல்லை,
கண்டதெல்லாம்
கண்கொள்ளாக்
காட்சி யன்றோ!
சொற்களால்
எழுதிப் புரிவதில்லை,
வார்த்தைகளால்
சொல்லிப் புரிவதில்லை,
உள்ளத்தால்
உணர்வால் புரிவது,
அந்தக்
கண்கொள்ளாக்
காட்சியாகும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

