என்றும் இளமையான காய் - சிந்தியல் வெண்பா

மொழுக்கென தேங்காய் இருக்குமே உள்ளே
பருப்பது வெள்ளை நிறத்தில் சுவையோ
இனிப்பென உண்ண இதம். --- (1)

பருப்பது முற்றினால் எண்ணெயாய் ஆகுமே
பார்க்கா மலேயே இருந்தால் பருப்பது
முற்றியே வீரிய காழ். (காழ் - விதை) --- (2)

காய்த்தது அன்றிலி ருந்தே அதுவுமே
காயெனும் சொல்லால் அழைக்கவே பட்டதாய்
காயதும் முற்றியும் காய். --- (3)

காயதன் பாகமெல் லாமுமே தேவையே
ஓடாய் கயிரென நாரென பஞ்சென
காயைத் துருவினால் பூ --- (4)

இறைவன் எதிரில் உடைத்தே படைத்தும்
இளங்காய் அதனையே சீவியே மேனியில்
ஊற்றி மகிழும் மனம். --- (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Sep-21, 10:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 16

மேலே