கற்பனை காதலி

காதலியே
உன் மீது எனக்கு மோகம்...
தீராத என் தாகம்...
தீ பற்றி தினமும் எரியுது
உன்னால் என் தேகம்...
திரும்பி பாரடி கொஞ்சம்...
இங்கு எனது கற்பனை
வேகம் உனை நான் கொண்ட
காதலையும் மிஞ்சும் மிஞ்சும்...

உனது கூந்தலின் கூர்மை
எனது கண்களை வெட்டுமடி
ஆயுதம் உன்னிடத்தில் இல்லாமல்...
நெற்றி பொட்டும் நீ
உடுத்தும் சேலையிடம் கர்வம் கொள்ளுமடி
வாய் திறவ முடியாமல்...
இரு புருவமும் ஈரூயிராய்
அருகருகில் காதல் சொல்லாமல்...
இரு கண்களும் ஓர் இமை
போர்வையில் இரவில் தூங்காமல்...
மூக்கும் எப்போதும் முணுமுணுக்குதடி
என் மூச்சு காற்றை இப்போது
சுவாசிப்பாயா என்று மனம் தாங்காமல்...
கீழ் உதடும்
மேல் உதடும்
காதலில் மோதுமடி கர்வம் கொள்ளாமல்...
முடிவில் முகமும் உருவம்
பெற்றதடி முழு நிலவாக
அவள் சிரிக்கையில் சந்தோஷத்தில்....

எழுதியவர் : சிவபார்வதி (25-Sep-21, 4:55 pm)
சேர்த்தது : சிவபார்வதி
Tanglish : karpanai kathali
பார்வை : 73

மேலே