பாரதியார் சித்தரா

பாரதி சித்தரா?

காலருகே வாடா சற்றேயுனை மிதிக்கிறேன்

சித்தர்கள்

சித்தர்கள் மானுடர்க்கு உடல் என்பது இருந்தால்தான் எச்செயலையும் செய்ய
முடியும். காரணம் பூரணம் என்கிற பரம்பொருளை சேர்வதற்கு சுமார் 200 முதல்
300 ஆண்டு களாவது அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கு.
மனிதர்கு ஆயுள் நிர்ணயம் ஏறக்குறைய 100 ஆண்டுகள். ஆகவே மனிதன் முதலில் தன்னுடைய
உடலில் ஆயுளை சுமார் 300 வாயது வரையாகிலும் நீட்டித்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு உபாயம்தான் இந்த காய கற்பm மென்ற பொருள் இதைக் கண்டு பிடித்து சாப்பிட
தேகத்தின் நிலையை நீட்டிக் கொண்டே போகலாம்

அப்படி த்ர்கத்தை நிலை நிறுத்தியப் பிறகே லகிமா மகிமா கரிமா பிராப்தி பரகாய பிரவேசம்,
போன்ற அஷ்டமா சித்திகளை செய்து பார்க்கலாம். முக்தி எனும் பரமாத்மாவிடம் சேர்லாம்
என்றும் சொல்கிறார்கள்.

தேமா. காய். கூவிளம். கூவிளம்

தேகம் இருந்தல்லோ சித்தெட்டும் ஆடலாம்
தேகம் இருந்தாக்காற் சேரலாம் பூரணம்
தேகம் இருந்தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம்
தேகம் இருந்தாக்காற் சேரலாம் முக்தியே. (திரு மூலர்)

சித்தர்கள் காய கற்பம் அருந்திய தைரியத்தில் "" அந்தக் காலனையும் காலால் உதைக்கலாம் ""
நீயும் ஒரு சிவனாகலாம் என்று பாடினார்கள்.

ஆனால் பாரதி காய கற்பம் சாப்பிட்டவரல்லர். ஆயினும்

காலா உனைநான் சிறுபுல்லென மதிக்கிறேன் -- என்றன்
காலருகே வாடா சற்றேயுனை மிதிக்கிறேன்

என்று எப்படிச் தைரியமாகச் சொன்னார். பாரதி சித்தர்களின் நூலைப் படித்து அதில்
சித்தர்கள் சொன்ன வார்த்தையின் அடிப்படையில் தான் அவ்வாறு கூறி யிருக்க வேண்டும்.
அவரும் சித்த நூற்களை ஆராய்ந் திருக்க வேண்டும் என்று புலனாகுகிறது.. பாரதியும்
சித்தர்கள் சொன்ன அதே வார்த்தை காலனையும் காலால் உதைக்கலாம் என்பதாம்..!

ஆனால் பாரதி அதற்கும் கோயில் யானைத் தூக்கி வீச சில நாளில் மாண்டு போனார்.
அவரிருந்தால் அந்த காய கற்பத்தைக்vகண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

எழுதியவர் : பழனி ராஜன் (29-Sep-21, 10:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 447

மேலே