மகனை இழந்த துயரம்
மகனை இழந்து துயரம் எனக்கும் எனது இணையருக்கும் ஆறுதல் கூறி எங்களது குடும்பத்தலைவரான கருநாடகத் சிறுபான்மைய நல பேரவையின் தலைவர் ஒருவராக மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பொற்கிழிபாவலர் இராகு.அரங்கசாமி .அவர்கள் தன் உயிருடன் இருக்கும் பொழுது மகனைப் பிரிந்த தாய் தந்தையின் துயரம் எத்தகையானது என்பதை எடுத்துரைக்கமுடியாது. பாசமுல்ல மகனை பிரிவினை மனவலிச் சொல்லமுடியாது.பெற்றவளும் மார்பில் அணத்து தவழப்பொழுது அம்மா என்ற அழைப்பில் துடிக்கும் துடிப்பு இடியும் தலைபமேல் விழந்தது போல் அலறல். அதேபோல் தந்தையும் மார்பிலும் தோலிலும் அணைத்து அருமை மகனின் என் மகனே! என் செல்வமே! என் அப்பனே! என் உயிரே! காலனிடம் உன்னை முன்னனுப்பிவிட்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே' இழப்பு என்னவென்று சொல்லுவது. ஈமக்கடன்களை எல்லாம், என் மகனே! உனக்கு நான் செய்யும்படி ஆனதே! என்னைப் போன்ற ஒரு துர்ப்பாக்கியவான் யாரேனும் இவ்வுலகத்தில் உண்டா? என் மகனே . காலம் தான் பதில் சொல்லும்.அதை தான் கம்பன் தனது காப்பியத்தில் வடித்துத் தந்துள்ளார். பின்வரும் வரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
'மைந்தவோ எனும் மா மகனே எனும்
எந்தையோ எனும் என் உயிரே எனும்
உந்தினேன் உனை நான் உள்ளே எனும்
வெந்த புண்ணிட வேல் பட்ட வெம்மையான்'
ஐம்பத்தெட்டு கால பாசமிக்க அன்பு மகனின் இதயத்தில் சுமந்து இன்று பெற்றவர்களின் முன்னால் மடிவது என்றால். அந்த வலி என்பதே! எல்லையற்றது.பாச மகன் சத்திய சீலன்(பிரபாகரன்) வாழ்வின் அன்பில் சிறந்தவன் எனறு பாவலர். இராகு. அரங்கசாமி பெருமை !கொண்டவர்.
தலையின்மேல் சுமந்த கையள் தழலின்மேல் மிதிக்கின்றாள் போல் நிலையின்மேல் மிதிக்கும் தாளள் நேசத்தால் நிறைந்த நெஞ்சள் கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.
தலையின் மேல் கூப்பிக் கோர்த்த கைகளை உடையவளாய், நெருப்பின் மேல் நிற்பது போல நிலத்தின் மேல் நிற்கும் கால்களை உடையவளாய், வேடன் கணைபட்டு உயிர் துறந்து மலைமீது வீழ்ந்த மயிலைப் போல, நேசத்தால் நிறைந்த நெஞ்சையுடைய மண்டோதரி தன் மகன் உடல் மீது வீழ்கிறாள்.
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிரிலள் கொல்லோ! என்னப்
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் விம்மி யாதும்
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல
அயர்த்தனள் அரிதின் தேறி வாய்திறந்து அரற்றல் உற்றாள்.
மூச்சில்லை. உணர்வில்லை. உயிர் விட்டாளோ! என்று நினைக்கும்படி உடலில் ஓர் அசைவுமில்லை. ஒரு வார்த்தை வரவில்லை. விம்மி வியர்க்கவில்லை. வெகுநேரம் இப்படிக் கிடந்தாள். மெல்ல மெல்ல உணர்வு கூடி பெருமூச்சு விடுகிறாள். பின் தெளிந்து, வாய்திறந்து புலம்பத் தொடங்குகிறாள்.
தாய் காந்தம்மாள் அடக்கமுடியாத துக்கம் வாய் விட்டு கதறினார். ஊரே அழுதிட அனைத்திலும் உயர்ந்தவனே சத்திய சீலன் என்னை விட்டு எங்கே சென்றாய் தாய் கதறளை காண துடித்த மக்கள் வெல்லம் போல் நீருற்ற விடைகொடுக்க திரள்கின்றாள். சித்தியும் புலம்ப தங்கை தமையன் உற்றேர் கதறியழுத கட்சி சொல்வா ?
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்!’
ஆக, குழந்தை வளர்ப்பின் நோக்கம் என்ன என்பதையும் இக்குறள்
மறைமுகமாகத் தெரிவித்து விடுகிறது. அவனைச் சான்றோன் ஆக்குவதே,
நல்லவன் ஆக்குவதே தாயின் குறிக்கோள் என்கிறார் வள்ளுவர்.
இப்படி ஒரு மகனை பெற்றெயடுத்து பாசத்தில் மிகுந்த பிள்ளையை கண்முன்னே கை விட்டு போவதை! எந்த தாய்க்கு மனநேக பெற்றவள் இருக்க,கட்டியவள் இருக்க, நீ பெற்ற செல்வங்களை இருந்தும் தன்னும் தன்னியாய் மான்டிரே! அன்புக்கள் ஆயிரமிருந்து அனாதையாய் உன் உயிர் பிரிந்தது மகனை! எமக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கு என் எதிரில் நடக்கின்றது! தாய் புலம்பல் நின்ற மக்கள் கண்களில்நீர்மளமளவென்று கெட்டி காட்சி காண முடியவில்லை மகனை! மகனே! ஒருபக்கம் இல்லறத்தவள் திருமதி திலகவதி தனிப்பட்ட நின்று தவிக்கிறாள்.பிள்ளைகள்,செந்தில்,இரஜேஸ் மற்றும் மகள் சுமாமகேஸ்வரி கலைகளும் ஏம்மாற்றங்கள்,தடுமாற்றம் கவளை கண்டு துடிப்பு பார்க்க முடியாமல் போனது. வெம்பி வெம்பி கண்களில் மலமலவென நீர்வெல்லம் கணா துடித்தது கட்சிகள். அண்ணன். தம்பி தங்கை துடித்தெழுந்தக் கட்சி உற்றார் உறவினர் நண்பர்கள் கண்ணீரில் நின்றன.அனைவரும் விடைக் கொடுத்தார்.