தந்தையின் விட்டு புத்தகசாலை

A room without books is a body without a soul- marcus tallies cicero
நூல்கள் அறிவு எனும் சக்தியைக் கொடுத்து உடலுக்கு, உயிருக்கு , ஆன்மாவிற்கு ஒளியைக் கொடுக்கின்றது. சிந்திக்க வைக்கின்றது ; அறிவூட்டுகின்றது; சிந்தனைக்கு விருந்து அளித்து வாழ்க்கையை மெருகூட்டுகின்றது; தனிமையில் உற்ற நண்பனாக இருக்கின்றது. இப்படிப் புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறலாம். நூல்களைப் படிக்கும் சிறப்பு ஒரு தனிச் சிறப்புதான். நூலகத்தின் அழகிய முத்திரை 70வது ஆண்டு காலமாக பாவலரின் இல்லத்தில் இன்றும் நிலையாய் நிற்கின்றது .
ஆங்கிலேயர்கள் சுரங்க பணியாளர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டனர் தொழிலாளர்கள் வீடு மிகவும் சிறிதானது அவ்வீட்டில் புத்தக சலை இருப்பது என்றால் மிகவும் கடினமே.8x8அடியில் அகலம் வீடு.அதில் ஒரு சமையல் அறை ,ஒரு படைக்கை அறை மட்டும் தான் இருக்கும். இவ்வீடுகளில் பெரிய கூட்டமே இருக்கும். அப்படியிருக்கின்ற சிறிய இடத்தில் புத்தக சாலை அமைவது என்றால் வியப்புக் குறியது தான். அவ்வீடு பாய்மரத்தில் ஆனது. வீட்டின் கூரைகளில் மண் ஓடலானது மழை வந்தால் மிகவும் கடினமே. சில நேரங்களில் தண்ணீர் உள்ள புகுந்து விடும்.மின்சாரம் இருக்காது.எண்ணெய் விளக்குகள்தான். பிள்ளைகளின் கூச்சல் தாங்க முடியாதது . அக்கால கட்டத்திலே, தந்தையின் உயர்வான எண்ணங்களினால் கல்வி ஒரு அழியாச் செல்வமென்று நினைத்து சங்க இலக்கியம் வரலாற்று நூல்கள்ப் பேணிக்காத்தர்.
இளம்வயதிலேயே புத்தங்கள் படிப்பார்,மாத இதழிகளில் வெளிவரும் சரித்திர தொடர்கதைகள் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் சேகரித்துத் தொகுத்து புத்தகமாக வைத்துக் கொள்ளுவர். புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், சஞ்சிகைகளையும் மேஜை மேல் அடுக்கிக்கொண்டே போக்குவார். பாவலரின் பெருஞ்செல்வம் கல்வி செல்வம் அச்செல்வம் இல்லறம் கடல்போல் பெருகின.இணைவோரின் பகிர்ந்து, ஊற்றுக்களை போல் மனம் நிறைந்து புலரும் இலக்கியத்தைச் சான்றோர்களிடத்தும் விவாதம் செய்யாத மேடைகள் எத்தனையே! கணக்கிட முடியாது. இவ்வுலகமும் அழிந்திடாத திகட்டாத தமிழ் இலக்கிய புத்தகங்களை தினதோறும் பேணிக்காத்தர் .
பாவலரின் அன்றாடம் வேளை புத்தகங்களை அலங்கரித்து புத்தகங்களைச் சேகரிக்கும் புனிதயிடமாக வீட்டில் நூலகத்தை மாற்றியவர்.நூல்களை அலங்கரித்துத் தன்னை நாடி வருவோருக்கு அறிவு களஞ்சியமாகத் திகழும் ஆலயமே நூலகம். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் ஆலமர விழுதுகளாகவும் திகழ்ந்தவர். வீட்டிற்கு அறிவை ஊட்டும் சக்தி புத்தகத்திற்கு இருக்கின்றது. நூலகம் என்பது ஒரு கோயிலாக மாற்றியவர். தமிழ் வரலாற்றுப் பொக்கிஷங்கள் புத்தகங்கள் அலங்கரித்து வீட்டுப் புத்தக சாலை கோயிலாக மாற்றியவர். புத்தகங்கள் என்பது இறைவன். படிப்பவர்கள் பக்தர்கள். கிடைக்கும் அறிவே நூலகத்தில் பக்தர்களுக்கும் கிடைக்கும் நேரடி அருளாசிகள் என்பார்.
கல்வி வளர்ச்சிக்குச் சிறுவயதிலேயே குழந்தைகளிடம் விதைக்க வேண்டுமென்று அறிவூட்ட புதிய புத்தகங்களும் கொண்டு வந்து தருவார். பிள்ளைகள் கல்வி வளர்ச்சிக்காக, பிள்ளைகளுடன் சேர்ந்து நாளிதழ், புத்தகம், சஞ்சிகைகள் போன்றவற்றைச் சேர்ந்து படிக்கவைப்பார் சிறிய வழிகாட்டியாய் பிள்ளைகளுக்குப் பெரிய ஊக்குவிப்பாக இருந்தவர். கல்வி வளர்ச்சிக்கு வாசிப்புப் பழக்கம் ஊக்குவிப்பார். அவை , திருக்குறள் ஆத்திசூடி, பாரதியார் கவிதைகள் வாசிக்கும் பழக்கத்தைச் சிறுவயதிலேயே குழந்தைகளிடம் விதைத்தவர்.அந்தக் கடமையைச் சவ்வெனச் செய்வதற்கு வீட்டு நூலகம் பெரும் பங்காற்றும்.
மேலும் நூலக அறையில் புகழ் பெற்ற அறிஞர்களின் படங்களையும்.அறிஞர்களின் சுவரில் அலங்கரித்து கொண்டுருபார் . இதனால் நூலகம் நல்ல நேர்மறைச் சிந்தனைகளைக் கொடுத்து ஒரு இதமான சூழலை ஏற்படுத்தும். உதாரணத்திற்குக் காரல் மார்க்ஸ் ,. லெனின் ஜோஷாப் ஸ்டாலின் மாவோ சேதுங்,பாரதியார் பாரதிதாசன் ,திருவள்ளுவர் பெரியார் இன்னும் ஆன்மிகத்தில் ஏசு,புத்தர் காந்தி அவர்களின் மிகவும் நேர்மறை சிந்தனையைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. அது மட்டமில்லாமல் குடும்பம் புகைப்படங்கள் நண்பர்கள் புகைப்படங்கள், அவருடைய முதுகலை சான்றுகள்,சாதனை விருந்துகள் அவரின் நூலகத்தின் சுவரில் அலங்கரித்து நல்ல ஆற்றலைப் பெற்று மகிழ்ச்சிக் கொள்ளுவார்.

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிச்சந்திர (1-Oct-21, 1:38 pm)
பார்வை : 149

மேலே